×
Saravana Stores

ஆடியில் தொடங்குகிறது பரி வேட்டை சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு

அவனியாபுரம்: சசிகலா, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்கமுடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்த சசிகலா முடிவு செய்துள்ளார். தொண்டர்களையும், கட்சியையும் ஒருங்கிணைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ள சசிகலா, இதற்காக நேற்று இரவு மதுரை வந்தார். தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். சசிகலாவை வரவேற்கும் விதமாக மதுரை விமான நிலைய பகுதிகளில் மதுரை மாவட்ட அதிமுக என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘ஆட்டம் போட்ட கூட்டம் ஆடி அடங்கிவிட்டது. ஆடியில் தொடங்குகிறது சின்னம்மாவின் பரிவேட்டை’ என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டரால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஆடியில் தொடங்குகிறது பரி வேட்டை சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Audi ,Pari Hunt Sasicala ,Avanyapuram ,Sasikala ,OPS ,DTV ,Edappadi Palanisami ,Dinakaran ,Adamugawa ,Tamil Nadu ,Adimuga ,Bari ,Hunt ,
× RELATED தோஷங்களை போக்கும் மஹாளயபட்சம்