×
Saravana Stores

மொஹரம் பண்டிகையை ஒட்டி நாளை சனிக்கிழமை அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: மொஹரம் பண்டிகையை ஒட்டி நாளை (ஜூலை 17) சனிக்கிழமை அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இஸ்லாமியர்களின் நான்கு புனித மாதங்களில் புத்தாண்டின் முதல் மாதமாக வரும் மொஹ்ரமும் ஒன்றாகும். ஆனால் புத்தாண்டு பிறப்பு மற்றும் புதிய இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் என இந்த மாதத்தை இஸ்லாமியர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவது கிடையாது. மாறாக துக்க மாதமாகவே கடைபிடிக்கிறார்கள். கி.பி.680 ஆம் ஆண்டு நடந்த கம்பாலா போரில் இறைத் தூதர் முகம்மது நபியின் பேரன் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாக மொஹ்ரம் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டும் உலகம் முழுவதும் நாளை மொஹரம் அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதேபோல, அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மொஹரம் பண்டிகையை ஒட்டி நாளை சனிக்கிழமை அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Metro Rail Company ,Metro ,Moharam festival ,Chennai ,Chennai Metro Railway Company ,Moharam ,Mohra ,Islamists ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அடையாறு...