×
Saravana Stores

தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து நாட்களும் மதிய உணவுடன் முட்டை வழங்க முடிவு

பெங்களூரு: தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து நாட்களும் மதிய உணவுடன் முட்டை வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. பிரபல தொழிலதிபர் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையுடன் இணைந்து ரூ.1,500 கோடி செலவில் முட்டை வழங்க கர்நாடக பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தற்போது வாரத்துக்கு 2 முட்டைகள் மட்டுமே மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் நிலையில் இனி 6நாட்களும் முட்டை வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில் வாரத்தில் அனைத்து நாட்களும் முட்டை வழங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மது பங்காரப்ப கூறியுள்ளார். அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை வழங்கும் ரூ.1,500 கோடி மூலம் கர்நாடக அரசு பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகள் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கும் ஏற்கனவே காலை வேளையில் ராகி மால்ட் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து நாட்களும் மதிய உணவுடன் முட்டை வழங்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Karnataka ,Bengaluru ,Karnataka government ,Karnataka School Education Department ,Asim Premji Foundation ,
× RELATED தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட...