×
Saravana Stores

நடிகை கவுதமி வழக்கில் அழகப்பன் மீண்டும் கைது

சென்னை : நடிகை கவுதமி, அவரது சகோதரி சொத்துக்களை அபகரித்த விவகாரத்தில் அழகப்பனை மீண்டும் போலீசார் கைது செய்தனர். சினிமாவில் கவுதமி சம்பாதித்த சொத்துகளை நிர்வகிக்க, விற்பனை செய்ய அழகப்பன் என்பவரை நம்பி பொது அதிகாரம் வழங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது ரூ.25 கோடி சொத்துக்களை அழகப்பன் அபகரித்ததாக போலீசில் கவுதமி புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அழகப்பனை கைது செய்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவுசெய்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த அழகப்பன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

The post நடிகை கவுதமி வழக்கில் அழகப்பன் மீண்டும் கைது appeared first on Dinakaran.

Tags : Gautami ,Chennai ,Charleman ,
× RELATED அதிமுக கொள்கை பரப்பு துணைப் பொதுச்...