×
Saravana Stores

கர்நாடகாவில் இன்று ரெட் அலர்ட்

டெல்லி: கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் 21 செமீ-க்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. கேரளாவில் இன்று ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செமீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 7 11 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில் வரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

The post கர்நாடகாவில் இன்று ரெட் அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Red ,Karnataka ,Delhi ,Indian Meteorological Centre ,Kerala ,Dinakaran ,
× RELATED ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி…!...