×
Saravana Stores

கனமழை காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை: ஆட்சியர்கள் அறிவிப்பு

நீலகிரி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை இடையில் தொய்வடைந்த நிலையில் தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன்காரணமாக கேரள எல்லையோர தமிழ்நாட்டிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திலும் ஒரு சில இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலைியல் கனமழையின் காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். இதேப்போன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியின் மாகே பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை: ஆட்சியர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Walpara ,Nilgiri, Goa district ,Nilgiri ,Neelgiri district ,Kerala ,Tamil Nadu ,
× RELATED பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல்...