×
Saravana Stores

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 19,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்கத் தடை

ஓசூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 25,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபிணி அணையில் இருந்து 25,000 கனஅடி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 550 கனஅடி நீர்த்திறக்கப்படுகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையால் கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட நீர் நேற்று மாலை தமிழக எல்லையை வந்தடைந்தது.

இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று இரவு வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர் வரத்து, படிப்படியாக அதிகரித்து காலை 6 மணிக்கு வினாடிக்கு 19,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 19,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Okanagan Cauvery River ,Parisal ,Cauvery ,Karnataka ,Cauvery river… ,Dinakaran ,
× RELATED காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு;...