- போஜோ
- திருநாவுக்கரசு
- கள்ளக்குறிச்சி மாவட்டம்,
- உளுந்தூர்பேட்டை
- தாரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் நிலையம்
- மயிலாடுதர மாவட்டம்
குத்தாலம்: சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (34). மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். மனைவி, 3 மகன்கள் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.
பெரம்பூர் காவலர் குடியிருப்பில் வசிக்கும் திருநாவுக்கரசுக்கும், அப்பகுதியில் வசிக்கும் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் போனில் அடிக்கடி பேசும்போது நண்பரின் 16வயது மகளுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8ம்தேதி நண்பரின் மகளை காவலர் குடியிருப்புக்கு திருநாவுக்கரசு அழைத்து வந்து, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஹெல்ப் லைனுக்கு வந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ஆரோக்கியராஜ், பெண் உதவியாளருடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இதுதொடர்பாக பெரம்பூர் காவல் நிலையத்தில் ஆரோக்கியராஜ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, திருநாவுக்கரசை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
The post சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம்: போக்சோவில் போலீஸ்காரர் கைது appeared first on Dinakaran.