சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு நீண்டகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், குறிப்பிட்ட 15 மருத்துவ மேற்படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது மருத்துவ மேற்படிப்புகளை படிக்க விரும்பும் அரசுப் பணியிலுள்ள மருத்துவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். ஆகவே, முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
The post அரசு டாக்டர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீடு தொடர வேண்டும்: எஸ்டிபிஐ வலியுறுத்தல் appeared first on Dinakaran.