பாலி: தண்டவாளத்தில் போட்டோ ஷூட் எடுக்கும் போது ரயில் வந்ததால் புதுமண தம்பதி பாலத்தில் இருந்து கீழே விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில்வே பாலத்தில் புதுமணத்தம்பதி போட்டோஷூட் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாலியில் உள்ள கோரம் காட் ரயில் பாலத்தில் ஒரு தம்பதி போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த பாலத்தின் மீது பயணிகள் ரயில் வர, என்ன செய்வதென்று தெரியாத அவர்கள் கீழே உள்ள 90 அடி பள்ளத்தாக்கில் குதித்தனர். உடனே அந்த ரயிலும் நின்றுவிட்டது.பலத்த காயமடைந்த அந்த தம்பதியினரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, கணவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மனைவியும் அதிக காயங்களுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
The post ரயில்வே பாலத்தில் போட்டோஷூட்: ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் குதித்து தப்பிய புதுமணத் தம்பதி; 2 பேரும் கவலைக்கிடம் appeared first on Dinakaran.