×
Saravana Stores

கனமழையால் வேகமாக நிரம்பும் கர்நாடக அணைகள் காவிரியில் 25 ஆயிரம் கனஅடிநீர் திறப்பு

பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 655 கனஅடி நீர்வரத்து உள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட அணையில் நேற்று 105.44 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 2,266 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. 2,284 அடி (கடல் மட்ட அளவில்) உயரம் கொண்ட அணையில் நேற்று 2,282.36 அடி தண்ணீர் இருந்தது.

இதன் மூலம் அணை முழுமையாக நிரம்பியது. குடகு மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஹாரங்கி அணை நிரம்பி வருகிறது. 2,859 அடி (கடல் மட்டளவில்) உயரம் கொண்ட ஆணையில் நேற்று மாலை நிலவரப்படி 2,855 அடி தண்ணீர் உள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடி மட்டுமே பாக்கியுள்ளது. குடகு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக அணைக்கு வினாடிக்கு 17,180 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில், முழு கொள்ளளவை எட்டும். அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி நதியில் திறந்து விடப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக ஹேமாவதி அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. 2,922 அடி (கடல் மட்டளவில்) உயரம் கொண்ட அணையில் நேற்று மாலை நிலவரப்படி 2,905.20 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,885 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்து நாட்களில் கேஆர்.எஸ் மற்றும் ஹேமாவதி ஆகிய இரு அணைகள் முழுமையாக நிரம்பி விடும் என்று நீர்ப்பாசன துறை வட்டாரம் மூலம் தெரியவருகிறது.

The post கனமழையால் வேகமாக நிரம்பும் கர்நாடக அணைகள் காவிரியில் 25 ஆயிரம் கனஅடிநீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Karnataka ,Bengaluru ,KRS ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: அருவியில் குளிக்க தடை