×
Saravana Stores

கோபா அமெரிக்கா கோப்பை: 16வது முறையாக பட்டம் வென்றது அர்ஜென்டினா

மயாமி கார்டன்ஸ்: தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரில், அர்ஜென்டினா அணி 16வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மயாமி கார்டன்ஸ் நகரில் நேற்று நடந்த பைனலில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா (1வது ரேங்க்) – கொலம்பியா (12வது ரேங்க்) அணிகள் மோதின. அர்ஜென்டினா 30வது முறையாகவும், கொலம்பியா 3வது முறையாகவும் பைனலில் விளையாடின. முதல் பாதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் 0-0 என சமநிலை வகித்தன. 2வது பாதியில் கொலம்பியா கை ஓங்க ஆரம்பித்தது. 66வது நிமிடத்தில் மெஸ்ஸி காயம் காரணமாக வெளியேற, அர்ஜென்டினா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த நேரத்தில் கொலம்பியாவின் கோல் முயற்சிகளும் அதிகரிக்க… அதைப் பார்த்து மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த மெஸ்ஸி கண்ணீர் வடித்தார். எனினும், கொலம்பியாவை சமாளித்து விளையாடிய அர்ஜென்டினா 75வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. ஆனால், அது ‘ஆப்சைடு’ ஆக நிராகரிக்கப்பட்டது. 2வது பாதியிலும் கோல் விழாமல் ஆட்டம் டிராவில் முடிய, கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. 112வது நிமிடத்தில் லாடரோ மார்டினஸ் மின்னல் வேகத்தில் கோல் அடிக்க, அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 16வது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்றது.

காயம்… அழுகை… ஆனந்தக் கண்ணீர்!
* கொலம்பியா அணியுடனான பைனலில் காயம் காரணமாக வெளியேறிய அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி, மைதானத்துக்கு வெளியே அமர்ந்து கதறி அழுதார்.
* கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அந்தப் பகுதி சிவந்து, வீங்கியதை அடுத்து அவர் ஷூவை கழற்ற நேரிட்டது.
* விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கோப்பையை தக்கவைக்க, மெஸ்ஸியின் அழுகை ஆனந்தக் கண்ணீராக மாறியது.
* கோபா அமெரிக்கா கோப்பையுடன் குதூகலிக்கும் மெஸ்ஸி குடும்பம்.

The post கோபா அமெரிக்கா கோப்பை: 16வது முறையாக பட்டம் வென்றது அர்ஜென்டினா appeared first on Dinakaran.

Tags : Copa America Cup ,Argentina ,Miami Gardens ,Miami Gardens, Florida, United States ,Dinakaran ,
× RELATED வானில் நெருப்பு வளையம்.. தென் அமெரிக்க...