×
Saravana Stores

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சிமாவட்டம் கருணாபுரம், மாதவ சேரி சேஷசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த ஜூன் 18-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தினர். இவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 66 பேர் உயிரிழந்தனர்.புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட 10 பேர் வரை குணம் அடைந்து வீட்டுக்கு சென்று உள்ளனர்.7 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் விஷ சாராயம் குடித்து ஜிப்மரில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த, 72 வயது ஆகும் கண்ணன் என்பவர் உயிரிழந்து உள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த கண்ணனின் கணையம், சிறுநீரகம் உட்பட அனைத்து உறுப்புகளும் செயல் இழந்ததால் உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 இறந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாசில்தார்கள் இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Madhava slum ,Seshasamuthram ,Karunapuram ,Kallakurichimavatam ,
× RELATED அரசு பள்ளியில் புறக்கணிப்பதாக கூறி...