- விம்பிள்டன்
- கிரெஜ்கொவா
- லண்டன்
- விம்பிள்டன் டென்னிஸ்
- கிராண்ட் ஸ்லாம்
- இங்கிலாந்து
- செர்பியா
- ஜோகோவிக்
- ஸ்பெயின்
- தின மலர்
லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த பைனலில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6-2,6-2,7-6 என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார். 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அவருக்கு 29 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
இதனிடையே மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற செக்குடியரசின் பார்பரா கிரெஜ் கோவா, டபிள்யூடிஏ தரவரிசையில் 22 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை பிடித்துள்ளார். ரன்னரான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 2 இடம் முன்னேறி 5வது இடத்தில் உள்ளார். போலந்தின் இகாஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் அரினா சபலென்கா, உக்ரைனின் எலெனா ரைபகினா ஆகியோர் முதல் 4 இடத்தில் உள்ளனர்.
The post விம்பிள்டன் சாம்பியன் கிரெஜ்கோவா 10வது இடத்திற்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.