- கோபா அமெரிக்கா கால்பந்து
- அர்ஜென்டீனா
- கொலம்பியா
- மியாமி
- ஐக்கிய மாநிலங்கள்
- கனடா
- உருகுவே
- மியாமி ஹார்டு ராக்
- தின மலர்
மியாமி: 48வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வந்தது. இதில் அரையிறுதியில் கனடாவை அர்ஜென்டினாவும், உருகுவேவை கொலம்பியாவும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறின. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு மியாமி ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் தொடங்கி நடந்த இறுதி போட்டியில் உலகசாம்பியனும், நம்பர் 1 அணியுமான மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா ,12வது இடத்தில் உள்ள கொலம்பியா மோதின.
பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் அர்ஜென்டினாவுக்கு கொலம்பியா கடும் சவால் அளித்தது.முதல் பாதி கோல் இன்றி முடிந்தது. 2வது பாதியிலும் இருஅணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்க வில்லை. 90 நிமிடம் முடிந்தும் கோல் அடிக்கப்படாததால் கூடுதலாக 15 நிமிடம் வழங்கப்பட்டது.அதில் கோல் அடிக்கப்படவில்லை. இதையடுத்து மீண்டும் 15 நிமிடம் வழங்கப்பட்டது. இதில் ஆட்டத்தின் 112 வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் லாட்டாரோ மார்டினெஸ் கோல் அடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்க அடுத்த 13 நிமிடம் கொலம்பியா போராடியும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று 16வதுமுறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 2001ல் பட்டம் வென்ற கொலம்பியா 23வது ஆண்டுக்கு பின் பைனலுக்குள் நுழைந்த நிலையில் 2வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
The post கோபா அமெரிக்கா கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன்; 16 வது முறையாக பட்டம் வென்றது appeared first on Dinakaran.