×
Saravana Stores

4 கோடி பறிமுதல் விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

டெல்லி: ரூ.4 கோடி பறிமுதல் விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் கேசவ விநாயகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவால் கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் கபில் சிபல் வாதம். சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

 

The post 4 கோடி பறிமுதல் விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! appeared first on Dinakaran.

Tags : Bo ,J. K. Supreme Court ,Administrator ,Kesava Vinayakath ,Delhi ,J. K. ,Supreme Court ,Kesava Vinayakat ,CPCID ,Court ,Kesava Vinayakam ,Dinakaran ,
× RELATED தவெகவினர் பாமகவில் ஐக்கியம்