×
Saravana Stores

காமராஜரின் 122 வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை..!!

புதுச்சேரி: காமராஜரின் 122 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜர் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்தும் அவரின் சாதனைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். பின்னர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.காங்கிரஸ் கட்சி மாநில தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் காமராஜரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

The post காமராஜரின் 122 வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry chief ,Rangasamy ,Kamaraj ,Chief Minister ,Puducherry ,Rangasami ,Karmaveer Kamarajar ,Tamil ,Nadu ,Congress ,
× RELATED திருமலை விஐபி தரிசன டிக்கெட் விவகாரம்...