×
Saravana Stores

அம்பானி வீட்டு திருமணம்: விருந்தினர்களுக்கு Return Gift-ஆக கொடுத்தது என்ன?.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்!!

மும்பை: மும்பையில் நடந்த தனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரபலங்களுக்கு அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி கொடுத்த பரிசு அனைவரின் புருவங்களையும் உயர செய்துள்ளது. நம்ம ஊர்களில் திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்களுக்கு திருமண வீட்டார் தாம்பூல பைகளை வழங்குவார்கள். அதில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இனிப்பு, சிறிதான பரிசு பொருட்கள் இடம்பெறும். சிலர் புத்தகங்களை, மரக்கன்றுகளை வழங்குவார்கள். ஆனால் உலகின் மிகப்பெரிய பணக்காரரான அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள் பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனந்த அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் சல்மான் கான், ரஜினிகாந்த், ஷாருக் கான், மற்றும் உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆனந்த் அம்பானியின் இந்த திருமண விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மட்டும் ரூ.1.5 கோடி மதிப்பிலான, தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட ஆடிமார்ஸ் பிகே கைக்கடிகாரம் பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். இந்த கடிகாரங்களில் 18 கேரட் ரோஸ் தங்க உறை, கையெழுத்து பாணி கிராண்ட் டேபிஸ்ட்ரி வடிவமைப்பு கொண்ட ரோஸ் தங்க டைல், நீல நிற அலங்காரங்கள் என தனித்துவமான அம்சங்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் கிராண்டே டாபிசேரி வடிவத்தில் ஒளிரும் நேரக்காட்டியும் உள்ளது. நாள், வாரம், மாதம், ஆண்டு மட்டுமல்ல லீப் ஆண்டுக்கு ஏற்ற வகையிலும் மாற்றம் செய்து கொள்ளலாம். நாம் எந்த நாட்டிற்கு செல்கிறோம் அந்த நாட்டின் காலநிலைக்கு ஏற்ப இந்த கைக்கடிகாரத்தில் நேரத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஒருமுறை சார்ஸ் செய்தால் 40 மணிநேரம் பயன்படுத்தி கொள்ளலாம். 20 மீட்டர் வரை நீர் எதிர்ப்புத் திறன் உள்ளது. இணையத்தில் பரவி வரும் காணொளிகளில், ஷாருக்கான், ரன்வீர் சிங், சிக்கர் பஹரியா மற்றும் பல பிரபலங்கள் திருமண விழாவில் பங்கேற்ற பிறர் இந்த கடிகாரங்களை அணிந்திருப்பதை காணலாம்.

The post அம்பானி வீட்டு திருமணம்: விருந்தினர்களுக்கு Return Gift-ஆக கொடுத்தது என்ன?.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்!! appeared first on Dinakaran.

Tags : Ambani ,Mumbai ,Anand Ambani ,
× RELATED முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியுடன் நயன்தாரா பிசினஸ்