×
Saravana Stores

விபத்தில் இருவர் உயிரிழப்பு: வேடிக்கை பார்க்க வந்து பலர் காயம்

விருதாச்சலம்: விருதாச்சலம் அருகே பரவலூர் -கோமங்கலம் இடையே பைக்கில் சென்ற இரு இளைஞர்கள், லாரி மோதியதில் உயிரிழந்தனர். விபத்தை வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டத்தின் மீது, கார் மோதியதில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓட்டம். கார் ஓட்டுநரைப் பிடித்து அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விபத்தில் இருவர் உயிரிழப்பு: வேடிக்கை பார்க்க வந்து பலர் காயம் appeared first on Dinakaran.

Tags : Virudachalam ,Parvalur ,Gomangalam ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் லாட்டரி விற்பனை: 4 பேர் கைது