தென்காசி: மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் முறையாக இல்லாமல் அவ்வப்போது மாறி வரும் நிலையில் உள்ளது. கடந்த 2 நாட்களாக அருவிகளில் சீராக தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக நீராடிச் சென்றனர். நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
நேற்று இரவு முதல் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அனைத்து அருவிகளிலும் குளிக்க விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி மற்றும் புலி அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து குற்றாலத்துக்கு குளிக்கவந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
The post மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.