×
Saravana Stores

நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுதவிர 17ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரி, கோவை உள்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Orange ,districts ,Nilgiris ,Coimbatore ,Chennai ,Tamil Nadu ,Tirupur ,Theni ,Dindigul ,Dinakaran ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக...