கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடந்து வரும் மோதல்களை கண்டித்து மாநில ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்த அனுமதி கோரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு ஆளுநர் மாளிகை முன் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி போராட்டம் நடத்தினார்.
அது போல் எனவே தனக்கும் அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இதை விசாரித்த விசாரித்த நீதிபதி ஆளுநர் மாளிகை முன் ஜூலை 14ம் தேதி 4 மணி நேரம் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார். இதையடுத்து கட்சி தொண்டர்களுடன் சுவேந்து அதிகாரி நேற்று காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை போராட்டம் நடத்தினார். அப்போது, மம்தா அரசுக்கு எதிராக பாஜவினர் கோஷமிட்டனர்.
The post கொல்கத்தாவில் கவர்னர் மாளிகை முன் பாஜ தர்ணா appeared first on Dinakaran.