×
Saravana Stores

ஆடி மாத பூஜை சபரிமலையில் நடைதிறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகளுக்காக இன்று (15ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

நாளை முதல் ஆடி மாத பூஜைகள் தொடங்கும். நாளை முதல் வரும் 20ம் தேதி வரை 5 நாட்களும் காலை 5.20 மணி முதல் 10 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 20ம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

The post ஆடி மாத பூஜை சபரிமலையில் நடைதிறப்பு appeared first on Dinakaran.

Tags : Aadi Madha Puja ,Sabarimala ,Thiruvananthapuram ,Aadi ,Sabarimala Ayyappan temple ,Melshanthi Mahesh Namboothiri ,Tantri Kandar Mahesh Mohaner ,Aadi month ,
× RELATED சித்திரை ஆட்டத்திருநாள் திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு