×
Saravana Stores

டிஎன்பிஎல் டி20 திருச்சி சோழாஸ் அபார வெற்றி

கோவை: டிஎன்பிஎல் டி20 தொடரில் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியுடன் மோதிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 35 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், திருச்சி சோழாஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது. சஞ்சய் யாதவ் 68 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), ஜாபர் ஜமால் 32 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். வசீம் அகமது, ஷ்யாம் சுந்தர் தலா 19, ராஜ்குமார் 18*, சரவண குமார் 17* ரன் எடுத்தனர்.

ஸ்பார்டன்ஸ் தரப்பில் பொய்யாமொழி 3, அருண்மொழி, அவுஷிக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் 18.3 ஓவரில் 163 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. முகமது அட்னன் கான் 40, விவேக் 33, சன்னி சாந்து 29, ஹரிஷ் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் பெரிதாகக் கை கொடுக்கவில்லை. சோழாஸ் பந்துவீச்சில் சரவண குமார் 3, அந்தோனி தாஸ், ராஜ்குமார் தலா 2, டேவிட்சன், விக்னேஷ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். திருச்சி கிராண்ட் சோழாஸ் 35 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி 2 புள்ளிகள் பெற்றது.

The post டிஎன்பிஎல் டி20 திருச்சி சோழாஸ் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : TNBL T20 ,Trischi Chozhas ,Goa ,Trichchi ,Grand Sozhas ,SKM Salem Spartans ,Sri Ramakrishna College of Arts and Sciences Cricket Ground ,Dinakaran ,
× RELATED கோவையில் தேசிய அளவிலான வாகனத்...