×
Saravana Stores

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மெக்கானிக் கைது

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நேற்று கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில்; 16 வயதுடைய எனது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மகளிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறிய வாலிபர், பாலியல் டார்ச்சர் செய்துள்ளார். எனவே வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து கோயம்பேடு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்தபோது, சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த நிர்மல் (26) என்பதும் அதே பகுதியில் மெக்கானிக் வேலை செய்து வருவதும், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: மெக்கானிக் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Koyambedu ,Chennai ,All Women Police Station ,
× RELATED பூக்கள் விலை கடும் சரிவு