×
Saravana Stores

இளம்பெண் திடீர் உயிரிழப்பு

 

விருதுநகர், ஜூலை 14: விருதுநகர் சிவந்திபுரம் காட்டுத்தெருவை சேர்ந்தவர் திலக். இவரது மனைவி தனலட்சுமி(38). இவர் செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். வலிப்பு நோயிற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென தனலட்சுமிக்கு வலிப்பு ஏற்பட்டது.

உறவினர்கள் உடனடியாக அவரை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தனலட்சுமி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தனலட்சுமியின் தாய் மாலபுஷ்பம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post இளம்பெண் திடீர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Tilak ,Shivanthapuram Pathutthera ,Thanalakshmi ,
× RELATED அவரையில் காய்ப்புழு தாக்குதல் தடுக்கும் முறை