×
Saravana Stores

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 1,181 பேர் ஆப்சென்ட்

 

தேனி, ஜூலை 14: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வினை தேனி மாவட்டத்தில் 1181 பேர் எழுதவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 பணிக்கான முதல்நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்தது. தேனி மாவட்டத்தில் இத்தேர்விற்காக தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலை பள்ளிகள், தேனி கம்மவார் சங்க கல்லூரிகள், கோட்டூரில் அரசு பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, பழனி செட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளி, தேனி பிசி கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 14 மையங்களில் தேர்வுகள் நடந்தன. இத்தேர்வினை 3,875 பேர் எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இத்தேர்வினை மொத்தம் அனுமதிக்கப்பட்ட 3,875 பேரில் 2,694 பேர் மட்டும் தேர்வு எழுதினர். இதில் 1,181 பேர் தேர்வு எழுத வரவில்லை.

 

The post டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 1,181 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Theni ,TNPSC Group ,Tamil Nadu Government Staff Selection Commission ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு