சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டம் முதலான எண்ணற்ற புதுமையான திட்டங்களால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வரலாற்று சாதனை வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டம், அயோத்திதாச குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், முதலான திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைந்து வருகிறார்கள்.
குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள மக்கள் நல திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தாய்மார்கள், கல்லூரி செல்லும் மாணவர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைவரும் பயனடைந்து வருகிறார்கள்.
இத்திட்டங்கள் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை வரவேற்று அங்கும் செயல்படுத்தி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதயில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 149 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 10,651 மாணவ, மாணவியர் பயன். முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் 21 ஆயிரத்து 93 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.
இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின்கீழ் ஓராயிரத்து 328 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டு 83 பெண் தன்னார்வலர்கள் மூலம் பயனடைகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ், 53 ஆயிரத்து 375 குடும்பத்தலைவிகள் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகின்றனர். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தின் கீழ் 3 கோடியே 41 லட்சத்து 99 ஆயிரத்து 712 முறை மகளிர், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 672 திருநங்கைகள், 4 லட்சத்து 90 ஆயிரத்து 176 மாற்றுத்திறனாளிகள், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 88 துணையாளர்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.
நகைக்கடன் தள்ளுபடித் திட்டத்தின்கீழ், ஓராயிரத்து 633 பயனாளிகளுக்கு ரூ.8.50 கோடி நகைக்கடன் தள்ளுபடி, இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின்கீழ் 11 லட்சத்து 55 ஆயிரத்து 400 ரூபாய் செலவில் கட்டணமின்றி விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 190 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின்கீழ் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.16 கோடியே 76 லட்சம் செலவில் 901 பம்ப்செட்களுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விவசாயிகள் பயடைந்துள்ளனர்.
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின்கீழ் 6 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, 4,621 பேர் பயனடைந்துள்ளனர். முதல்வர் செயல்படுத்தியுள்ள மக்கள் நலத்திட்டங்களால், அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கியது. பா.ம.க மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை பெற முயன்றது. திமுக செயல்படுத்தியுள்ள சிறப்பான எண்ணற்ற திட்டங்களை முன்னிறுத்தி, மக்களிடம் திட்டங்களையும் பயன்களையும் எடுத்துக் கூறி, மக்களின் பேராதவை பெற்று இதுவரை இல்லாத அளவு திமுக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post திமுக சாதனை வெற்றிக்கு காரணம் என்ன? appeared first on Dinakaran.