×
Saravana Stores

165 உறுப்பினர்கள் ஆதரவு நேபாள புதிய பிரதமராக சர்மா ஒலி நாளை பதவி ஏற்பு

காத்மண்டு: நேபாளத்தின் அடுத்த பிரதமராக கே.பி.சர்மா ஒலி நாளை பதவி ஏற்க உள்ளார். 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த 2022 நவம்பரில் நடந்த தேர்தலில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெறவில்லை.இதையடுத்து பிரதமரான பிரசந்தா தலைமையிலான அரசு மீது 4நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதேகாரணத்துக்காக கடந்த 12ம் தேதி பிரசந்தா அரசு மீது 5ம் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் 63 வாக்குகளை பெற்ற பிரசந்தா அரசு தோல்வி அடைந்தது.

இதையடுத்து கே.பி.சர்மா ஒலி பிரதமராக ஷேர் பகதூர் தூபா தலைமையிலான நேபாளி காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. 165 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆதரவு கடிதத்துடன் அதிபர் ராம் சந்திர பவுடேலை சந்தித்த சர்மா ஒலி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் கே.பி.சர்மா ஒலி நாளை 3வது முறையாக நேபாள பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து தன் அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்களின் பட்டியலை தயாரிப்பதில் கூட்டணி கட்சிகளுடன் சர்மா ஒலி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

The post 165 உறுப்பினர்கள் ஆதரவு நேபாள புதிய பிரதமராக சர்மா ஒலி நாளை பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Sharma Oli ,Nepal ,Kathmandu ,KP ,Nepali Parliament ,Prashanth ,
× RELATED டெல்லி பர்கர் கிங் கொலை 19 வயது பெண்...