- யூரோ கோப்பை இறுதிப் போட்டி ஸ்பெயின்
- இங்கிலாந்து
- பெர்லின்
- ஸ்பெயின்
- யூரோ கோப்பை கால்பந்து
- இத்தாலி
- தின மலர்
பெர்லின்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் பரபரப்பான பைனலில் ஸ்பெயின் – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. கடந்த ஜூன் 9ம் தேதி தொடங்கிய இத்தொடரில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றன. நடப்பு சாம்பியன் இத்தாலி நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது. பெர்லின் ஒலிம்பிக் அரங்கில் இன்று நள்ளிரவு நடைபெறும் பைனலில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே 3 முறை யூரோ கோப்பையை வென்றுள்ள ஸ்பெயின் 5வது முறையாக பைனலில் விளையாடுகிறது.
2012க்கு பிறகு பைனலில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், அதில் பட்டம் வென்று சாதிக்க ஸ்பெயின் முனைப்பு காட்டும். மோராடா தலைமையிலான ஸ்பெயின் அணியில் ஒல்மா, வில்லியம்ஸ், ஃபேபியான், ரோட்ரிகோ, மெரினோ, விவியன், கோல் கீப்பர் சைமன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன்றனர். 16 வயது இளம் வீரர் லாமின் யாமல் ஆட்டம் உலக அளவில் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் இங்கிலாந்துக்கு எதிராக இன்று ஏதாவது அதிசயம் நிகழ்த்த வாய்ப்பு இருக்கிறது.
அதே சமயம் ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. இதுவரை யூரோ கோப்பையை வெல்லாவிட்டாலும், தொடர்ந்து 2வது முறையாக பைனலுக்கு கொண்டு வந்துள்ளார். உலக கோப்பையை வென்றுவிட்ட இங்கிலாந்துக்கு யூரோ கோப்பை இன்னும் கனவாகவே இருக்கிறது. அதிலும் ஐரோப்பியாவின் குட்டி நாடுகள் எல்லாம் கோப்பையை முத்தமிட்ட நிலையில் இங்கிலாந்து அணிக்கு இன்னும் அது எட்டாக் கனியாகவே உள்ளது.
இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பெல்லிங்காம், ஃபோடன், ரிப்பயர், கீப்பர் பிக்ஃபோர்டு, சாகா, ரைஸ், வெகோர்ஸ்ட் ஆகியோர் கோப்பையை கைப்பற்றியே தீருவது என்ற உறுதியுடன் இருக்கின்றனர். அதிலும் 19 வயதான கோப்பி மைனோ நடுகளத்தில் கலக்குகிறார். இரு அணிகளும் கோப்பையை வெல்ல வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.
* ஸ்பெயின் இதுவரை யூரோ கோப்பை போட்டிகளில் இங்கிலாந்தை வென்றதில்லை என்ற வரலாறு உள்ளது. பைனலிலும் இந்த அணிகள் இதுவரை மோதியதில்லை. இதுவரை மோதிய 3 ஆட்டங்களிலும் இங்கிலாந்தே வென்றுள்ளது. 1996க்கு பிறகு இப்போதுதான் யூரோ கோப்பையில் இந்த அணிகள் மோத உள்ளன.
* இரு அணிகளும் 27 முறை மோதியுள்ளதில் இங்கிலாந்து 13-10 என முன்னிலை வகிக்கிறது (4 டிரா).
* இந்த ஆட்டங்களில் இங்கிலாந்து 45 கோல், ஸ்பெயின் 32 கோல் அடித்துள்ளன.
* சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகபட்சமாக 252 கோடி ரூபாய் வரை கிடைக்கும்.
The post யூரோ கோப்பை பைனல் ஸ்பெயின் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.