×
Saravana Stores

சில்லி பாயின்ட்…

* கடந்த 7 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* இந்தியா – இலங்கை அணிகளிடையே நடக்க உள்ள டி20, ஒருநாள் தொடர்களுக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டி20 தொடர் ஜூலை 26ம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில், ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு முதல் போட்டி பல்லெகெலேவில் 27ம் தேதி நடைபெறும். அடுத்த போட்டிகள் ஜூலை 28, 30ல் நடக்க உள்ளன. ஒருநாள் போட்டிகள் ஆக. 2, 4, 7ல் கொழும்புவில் நடக்க உள்ளன.

* ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீசுடன் டிரென்ட் பிரிட்ஜில் நடக்க உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

* மகளிர் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் களமிறங்கும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய அணி முன்னாள் வேகம் ஜுலன் கோஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Aussie ,Delhi Capitals ,Ricky Ponting ,Sourav Ganguly ,Dinakaran ,
× RELATED சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸி. வீரர் மேத்யூ வேடு ஓய்வு