- ஹேமந்த் சோரன்
- சோனியா காந்தி
- புது தில்லி
- ஜார்க்கண்ட்
- முதல் அமைச்சர்
- கல்பனா சோரன்
- காங்கிரஸ்
- முதல் அமைச்சர்.…
- சட்டசபை
- தின மலர்
புதுடெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் ஆகியோர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்தனர். ஜார்க்கண்ட்டில் நிலமோசடியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதுதொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து கடந்த மாதம் 28ம் தேதி ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து விடுதலையானார்.
இதைதொடர்ந்து ஹேமந்த் சோரன் கடந்த 4ம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் பதவி ஏற்றார். கடந்த மே 20ம் தேதி ஜார்க்கண்டின் காண்டே பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் ஆகியோர் டெல்லி சென்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து ஹேமந்த் சோரன் கூறியதாவது, “சிறையில் இருந்து வௌியே வந்த நான் மக்களவை தேர்தலுக்கு பிறகு சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இப்போது பேரவை தேர்தல் தொடர்பாக நாங்கள் எதையும் விவாதிக்கவில்லை” என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து டெல்லி முதல்வர் இல்லத்திற்கு சென்ற அவர்கள் அங்கு கெஜ்ரிவால் மனைவி சுனிதாவை சந்தித்து பேசினர்.
The post விரைவில் சட்டப்பேரவை தேர்தல் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார் ஹேமந்த் சோரன் appeared first on Dinakaran.