*சித்தூரில் போலீசார் அதிரடி
சித்தூர் : கர்நாடகாவில் இருந்து சித்தூர் மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்டு போலீசார் பறிமுதல் செய்த 3,902 லிட்டர் மதுபாட்டில்கள் ஜேசிபியை கொண்டு அழிக்கப்பட்டது.
சித்தூர் எஸ்பி மணிகண்டா உத்தரவின்பேரில், கர்நாடகாவில் இருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய கடத்தி வந்த மது பாட்டில்களை பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிக்க எஸ்பி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி நேற்று சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே மாநில அரசின் உத்தரவின் பேரில் எஸ்பி மணிகண்டா உத்தரவின் படிபலமநேரு நகர்ப்புற காவல் நிலையம், பைரெட்டிப்பள்ளி காவல் நிலையம் மற்றும் பலமனேரு எஸ்இபி காவல் நிலையங்களில் கடந்த 6 மாதங்களில் பதிவான 204 என்டிபிஎல் வழக்குகளில் 3,902.987 லிட்டர் மதுபாட்டில்கள் மற்றும் மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளை அழிக்க மாநில அரசு உத்தரவிடப்பட்டதால் அமலாக்க கண்காணிப்பாளர் ஸ்ரீ வி.ஸ்ரீதர் ராவ், மற்றும் உதவி அமலாக்க கண்காணிப்பாளர் ரவி, பலமனேரு நகர்ப்புற காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீ.சி.சந்திரசேகர், கிருஷ்ணய்யர், காவல் துணைக் கண்காணிப்பாளர், பைரெட்டிப்பள்ளி சுரேஷ் ரெட்டி, காவல் ஆய்வாளர், பழமனேரு மற்றும் பணியாளர்களின் மேற்பார்வையில் நேற்று மதியம் பலமனேரு டவுன், நியூ. குடியாத்தம் சாலையில் உள்ள பேரூராட்சியின் குப்பை கிடங்கு மையத்திற்கு கொண்டு சென்று அனைத்து மதுபாட்டில்கள் முழுவதும் கொண்டு வந்து அழிக்கப்பட்டது. ஜேசிபி மூலம் நசுக்கி அழிக்கப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டு மது பாட்டில்கள் அழிக்கும் வரை பணியில் ஈடுபட்டனர்.
The post கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3,902 லிட்டர் மதுபாட்டில்கள் ஜேசிபி மூலம் நசுக்கி அழிப்பு appeared first on Dinakaran.