சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தது. நேற்று இரவு முதல் சென்னையில் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை புற நகர்ப் பகுதிகள், மற்றும் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளது. காலை நேரத்திலும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக ஆலந்தூர், கிண்டி, மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க வந்த 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து தத்தளித்தன. அதில் 4 விமானங்கள், பெங்களூருக்கு திரும்பி அனுப்பப்பட்டன. மழை, சூறைக்காற்று காரணமாக, மொத்தம் 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிபட்டுள்ளனர்.
The post சென்னையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு: 15 விமானங்கள் தரை இறங்க முடியாமல் தத்தளிப்பு appeared first on Dinakaran.