திருவெறும்பூர், ஜூலை 13: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ற வாலிபர்களை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து ஒரு வாள் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். திருவெறும்பூர் போலீசார் காட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது வடக்கு காட்டூர் பாத்திமாபுரம் முதல் தெருவை சேர்ந்த ஜீவநாதன் மகன் வீரமணி (26), தெற்கு காட்டூர் அண்ணா தெருவை சேர்ந்த அருள்ராஜ் மகன் கௌதம் (23) ஆகிய இரண்டு பேரும் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பொழுது அவர்களை கையும் களவுமாக திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, வாள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post திருவெறும்பூர் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.