×
Saravana Stores

ராகுலுடன் கமலா ஹாரிஸ் பேச்சு

புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுள்ளது. ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்றுமுன்தினம் ராகுல்காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல்காந்தியை, கமலா ஹாரிஸ் தொடர்பு கொண்டு பேசியது முக்கியத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ராகுலுடன் கமலா ஹாரிஸ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kamala Harris ,Rahul ,NEW DELHI ,Congress party ,Rakulganti ,US ,Vice President ,Rakulkanti ,Dinakaran ,
× RELATED அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப்: கமலா ஹாரிஸ் காட்டம்