×
Saravana Stores

இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி: அட்கின்சன் ஆட்ட நாயகன்

லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச… வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 121 ரன்னுக்கு சுருண்டது (41.4 ஓவர்). இங்கிலாந்து அறிமுக வேகம் கஸ் அட்கின்சன் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 371 ரன் குவித்து ஆல் அவுட்டானது (90 ஓவர்).

கிராவ்லி 76, போப் 57, ரூட் 68, புரூக் 50, ஜேமி ஸ்மித் 70 ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜேடன் சீல்ஸ் 4, ஹோல்டர், குடகேஷ் தலா 2, ஜோசப் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 250 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 136 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

குடகேஷ் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் அட்கின்சன் 5, ஆண்டர்சன் 3, கேப்டன் ஸ்டோக்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 7, 2வது இன்னிங்சில் 5 என மொத்தம் 12 விக்கெட் கைப்பற்றிய அட்கின்சன் முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் நாட்டிங்காமில் ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது.

The post இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி: அட்கின்சன் ஆட்ட நாயகன் appeared first on Dinakaran.

Tags : England ,Atkinson ,London ,Himalayas ,West ,Indies ,Lord's ,West Indies ,Dinakaran ,
× RELATED லண்டனில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்..!!