×
Saravana Stores

ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? ஜிம்பாப்வேயுடன் இன்று 4வது டி20

ஹராரே: ஜிம்பாப்வே – இந்தியா மோதும் 4வது டி20 போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று மாலை 4.30க்கு தொடங்குகிறது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்டி டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, அடுத்த 2 போட்டியிலும் அபாரமாக வென்ற 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 4வது டி20 இன்று மாலை ஹராரேவில் நடக்கிறது. தொடர்ச்சியாக 3வது வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. அபிஷேக், கில், ருதுராஜ், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்ச, சிவம் துபே, ரிங்கு என அதிரடி பேட்ஸ்மேன்கள் அணிவகுப்பதால் ஜிம்பாப்வே பவுலர்களுக்கு சரியான சவால் காத்திருக்கிறது. வாஷிங்டன் சுந்தர் ஆல் ரவுண்டராக அசத்தி வருகிறார். ஆவேஷ் கான், கலீல் அகமது பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது.

அதே சமயம் சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே உள்ளது. முதல் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியும், அடுத்த 2 ஆட்டங்களில் பரிதாபமான தோல்வியைதான் சந்திக்க முடிந்தது. இன்றைய ஆட்டத்தில் வெல்வதின் மூலம் 2-2 என சமநிலைக்கு கொண்டு வருவதுடன், தொடரை வெல்வதற்கான வாய்ப்பையும் தக்கவைத்துக் கொள்ள முடியும். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

The post ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? ஜிம்பாப்வேயுடன் இன்று 4வது டி20 appeared first on Dinakaran.

Tags : Zimbabwe ,Harare ,T20I ,India ,Harare Sports Club ,T20 ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும்...