திருப்பரங்குன்றம்: மதுரை, காமராஜர் பல்கலைக்கழக வருவாயை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 2022ம் ஆண்டு பிஎஸ்சி கணிதம், சைகாலஜி, பிகாம், பிஏ தமிழ், ஆங்கிலம், பிசிஏ டேட்டா சயின்ஸ் ஆகிய 6 இளங்கலை பட்டப்படிப்புகள் துவஙகப்பட்டன. இதில் ஒவ்வொரு படிப்பிற்கும் தலா 60 இடங்கள் என மொத்தம் 360 இடங்களை கொண்டதாக இருந்தது.
இதில் சேர மாணவர்களும் ஆர்வம் காட்டினர். நடப்பு கல்வியாண்டு விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது. இதில் மேற்கண்ட பட்டப்படிப்புகளில் சேர சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களுக்கு சேர்க்கைக்கான அழைப்பு விடுக்கவில்லை.
அதுகுறித்து கேட்டபோது, இந்த ஆண்டு இப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை இல்லை என, பல்கலைக்கழக அலுவலர்கள் மாணவர்களிடம் வாய்மொழியாக கூறியுள்ளனர். இதனால் மாணவர்கள் வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. பல்கலைக்கழகத்தில் துவங்கிய பட்டப்படிப்புகளை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தியிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இளங்கலை படிப்புகள் நிறுத்தம்: மாணவர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.