×
Saravana Stores

பாப்பம்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

பள்ளிபாளையம், ஜூலை 13: பள்ளிபாளையம் அடுத்த பாப்பம்பாளையம் கிராம ஊராட்சி மையத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சேசஷாயி காகித ஆலை நிர்வாகத்தின் அமைப்பான சர்வசேவா அறக்கட்டளையும், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்திய முகாமை சர்வசேவா டிரஸ்ட் அறங்காவலர் சுரேஷ், ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சேலம் அரவிந்த் கண் மருத்துமனை குழுவினர் பங்கேற்று நோயாளிகளை பரிசோதித்தனர். இதில் 30 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, இலவசமாக அறுவை சிகிச்சையளிக்கப்பட்டது. பார்வை குறைபாடுள்ள 100 பேர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

The post பாப்பம்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Pappampalayam ,Pallipalayam ,Pappampalayam Village Panchayat Centre ,Sarvaseva Foundation ,Sesasahai Paper Mill Management ,Namakkal District Vision Loss Prevention Society ,
× RELATED கனமழை காரணமாக ரயில்வே நுழைவுப்...