×
Saravana Stores

வீட்டில் வைத்திருந்த ரூ.90 லட்சம் மாயம் என பாஜ நிர்வாகி புகார்

சேலம்: சேலத்தை அடுத்துள்ள மல்லூர் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருணாகரன் (50), சேலம் கிழக்கு மாவட்ட பாஜ செயலாளராக உள்ளார். இவர், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கருணாகரன், சேலம் எஸ்பி அருண்கபிலனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘தனக்கு சொந்தமான பூர்வீக சொத்தை விற்று ரூ.90 லட்சம் பணத்தை வீட்டில் வைத்திருந்தேன். அந்த பணத்தை கடந்த 29ம் தேதி பார்த்தபோது காணவில்லை. அதனை திருடிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்’ எனக்கூறியிருந்தார். புகாரின்பேரில், பாஜ மாவட்ட செயலாளர் கருணாகரனிடம் டிஎஸ்பி அமலாஅட்வின் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சொத்தை விற்று ரூ.90 லட்சம் பெற்றதற்கான ஆவணங்களை அவர் இதுவரை போலீசில் கொடுக்கவில்லை. இதனால் இது கொள்ளை நாடகமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர்.

The post வீட்டில் வைத்திருந்த ரூ.90 லட்சம் மாயம் என பாஜ நிர்வாகி புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Salem ,Karunakaran ,Mallur Dasanayakanpatti ,Salem East district ,SP ,Arunkapilan ,Dinakaran ,
× RELATED ₹3 லட்சம் கடனுக்கு ₹40 லட்சம் கேட்டு...