×
Saravana Stores

17 வயது கல்லூரி மாணவனை கட்டாயப்படுத்தி பலாத்காரம்: 24 வயது இளம்பெண் மீது போக்சோ வழக்கு

களக்காடு: 17 வயது கல்லூரி மாணவனை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த உறவினரான 24 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இளம்பெண், 17 வயது மாணவரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் தான் மட்டும் தனியாக இருப்பதாக கூறி வரவழைத்து உள்ளார். மாணவர் வீட்டுக்கு வந்த நிலையில், அவரை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபோல் மீண்டும் இளம்பெண் தனியாக இருந்தபோது மாணவரை வீட்டிற்கு வரவழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்தாராம். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் மாணவரை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு மாணவர் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக இளம்பெண், பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவர் மீது புகார் அளித்துள்ளார். கல்லூரி நிர்வாகம், மாணவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் மாணவரின் தாயார், 17 வயதான தனது மகனை கட்டாயப்படுத்தி உறவு (பலாத்காரம்) கொண்டதாக 24 வயது இளம்பெண் மீது நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து இளம்பெண் மீது போக்சோ வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 17 வயது கல்லூரி மாணவனை கட்டாயப்படுத்தி பலாத்காரம்: 24 வயது இளம்பெண் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Nanguneri ,Nellai district ,Thoothukudi ,
× RELATED களக்காடு அருகே விளைநிலங்களுக்குள்...