×
Saravana Stores

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தேமுதிக வரவேற்பு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 29ம் தேதி நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். எனவே மிக முக்கியமான கள்ளச்சாராய பிரச்னையான மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆளுநருக்கும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும் தேமுதிக சார்பாக வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் எங்கும் கள்ளச்சாராயத்தின் மூலம் ஒரு உயிர்கூட இனி பலியாகாத வண்ணம் சட்டத்தையும், காவல் துறையும் தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தேமுதிக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Governor ,Democrats ,CHENNAI ,DMDK ,General Secretary ,Premalatha ,RN Ravi ,Legislative Assembly ,
× RELATED சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள்...