- தமிழ்நாடு
- சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு
- வின்ஃபாஸ்ட்
- துகுடி
- சென்னை
- தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்ப
- EIA
- தூத்துக்குடி
- உலக முதலீட்டாளர்கள் மாநாடு
- தூத்துக்குடி
- தின மலர்
சென்னை: தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தூத்துக்குடியில் 2 நிறுவனங்கள் ரூ.26,000 கோடி முதலீடு செய்ய அரசுடன் ஒப்பந்தம் செய்தனர். உலகின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான, வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.
ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி ஆலை
தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க வின்பாஸ்ட் ஒப்பந்தம் செய்தது. ஆலை அமைக்க தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வின்பாஸ்ட் ஆலை அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார்.
கட்டுமான பணி மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ளது. முதல் கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் ஆலை அமைய உள்ளது. வின்பாஸ்ட் ஆலையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைய உள்ளது.
The post தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி..!!! appeared first on Dinakaran.