×
Saravana Stores

காற்றின் தரம், பருவநிலை மாற்றம், காடுகள், வனவிலங்குகள் உள்ளிட்டவை குறித்து இந்தியா-பூடான் இடையே இருதரப்பு ஆலோசனை கூட்டம்!!

டெல்லி : காற்றின் தரம், பருவநிலை மாற்றம், காடுகள், இயற்கை வளங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், வனவிலங்குகள் உள்ளிட்டவை குறித்து இந்தியா-பூடான் இடையே இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பூடான் அரசின் எரிசக்தி, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ஜெம் ஷெரிங் தலைமையிலான அந்நாட்டுப் பிரதிநிதிகள் குழு, மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கை டெல்லியில் சந்தித்து பேச்சு நடத்தியது. காற்றின் தரம், பருவநிலை மாற்றம், வனங்கள், இயற்கை வளங்கள், வனவிலங்குகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான அம்சங்கள் குறித்து இந்த பேச்சு வார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது.

அப்போது இந்தியாவின் முன்முயற்சியான சர்வதேச புலிகள் கூட்டமைப்பில் இணைந்ததற்காக பூடான் அரசுக்கு ஒன்றிய இணையமைச்சர் த கீர்த்தி வர்தன் சிங் நன்றி தெரிவித்தார். இரு நாடுகளும் ஒரே மாதிரியான புவியியல், சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார். பருவநிலை மாற்றம், காற்றின் தரம், வனவிலங்கு மேலாண்மை சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் இணைந்து பணியாற்ற இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. அதே நேரம் கூட்டு பணிக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என இந்தியா பரிந்துரைத்துள்ளது.

The post காற்றின் தரம், பருவநிலை மாற்றம், காடுகள், வனவிலங்குகள் உள்ளிட்டவை குறித்து இந்தியா-பூடான் இடையே இருதரப்பு ஆலோசனை கூட்டம்!! appeared first on Dinakaran.

Tags : India ,Bhutan ,Delhi ,Minister of Energy and Natural Resources ,Government of Bhutan ,Gem Shering ,Dinakaran ,
× RELATED UPI வசதியை, மாலத்தீவில் அறிமுகம் செய்தார் அதிபர் முகமது முய்சு