- திருப்பதி
- ஜமாலி ஆஞ்சநேயர்
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- ஜமாலி ஆஞ்சநேயர் கோவில்
- திருப்பதி ஏழு மலையான் கோயில்
ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே பெரிய மரக்கிளை விழுந்ததில் பெண் பக்தர் படுகாயமடைந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஜமாலி ஆஞ்சநேயர் கோயில் அந்த கோயிலுக்கு பக்தர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பாபவிநாசம் செல்லும் சாலையில் மரத்தின் பெரிய கிளை ஒன்று திடீரென விழுந்ததில் பெண் பக்தர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் சக பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த பெண்ணை மீட்டனர். திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post திருப்பதியில் மரக்கிளை விழுந்து பெண் பக்தை படுகாயம்: ஜமாலி ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றவருக்கு நேர்ந்த விபரீதம் appeared first on Dinakaran.