×
Saravana Stores

மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை கமுகமாக நடத்த முடியும் : ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து

சென்னை : மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை கமுகமாக நடத்த முடியும் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பருத்திப்பட்டில் சுந்தராட்சிஅம்மன் கோயில் திருவிழாவில் சாதிய பாகுபாடின்றி நடத்தக் கோரி பருத்திப்பட்டைச் சேர்ந்த பொன்னுத்துரை மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோவில் திருவிழாவில் அனைத்து சாதியினருக்கும் சம வழிபாட்டு உரிமையை தர உத்தரவிட வேண்டும்,” இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்தவிதமான சாதிய பாகுபாடும் இல்லாமல் விழாவை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுவதாக உறுதி அளித்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை கமுகமாக நடத்த முடியும். அதிகாரிகள் தலையிட்டு எவ்வாறு திருவிழாவை நடத்த முடியும்,”எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருவாய் கோட்டாட்சியருக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

The post மக்கள் தங்கள் மனதை மாற்றினால் மட்டுமே கோயில் திருவிழாக்களை கமுகமாக நடத்த முடியும் : ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,Aycourt ,Parthipat ,Sundaratsiamman Temple Festival ,Nella District Nanguneri ,Temple Festivals ,Dinakaran ,
× RELATED “ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு...