×
Saravana Stores

இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் மக்கள்.. டெல்லி முதலிடம், பஞ்சாப் 2ம் இடம், குஜராத் 3ம் இடம்!!

அகமதாபாத் : வெளிநாடுகளில் குடியேறிய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கும் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 2022ல் குஜராத்தைச் சேர்ந்த 241 பேர் இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்து இருந்தனர். கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து 485 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்திலேயே பாஸ்போர்ட்டை ஒப்படைத்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக உள்ளது. பாஸ்போர்ட்டை ஒப்படைத்தவர்களிள் பெரும்பாலானோர் 30-45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குடியேறியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்குப்பின் வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தரவுகளின்படி 2014-2022 வரையிலான காலகட்டத்தில் இந்திய குடியுரிமையை துறந்தவர்களின் எண்ணிக்கையில் குஜராத் மாநிலம் 3ம் இடத்தில் உள்ளது. 60,414 குடியுரிமையைத் துறந்து டெல்லி முதலிடத்திலும் 28,117 பேருடன் பஞ்சாப் 2ம் இடத்திலும் வகிக்கின்றன. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குடியுரிமையைத் துறப்பது ஆண்டுக்காண்டு அதிகரிப்பதற்கு உயர்கல்விக்காக வெளிநாட்டிற்கு செல்லும் இளைஞர்கள் படிப்பை முடித்து அங்கேயே பணியமர்ந்து அந்நாட்டின் குடியுரிமை பெற்றுவிடுவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆடம்பர வாழ்க்கைக்காக தொழில் அதிபர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதும் காரணமாக கூறப்படுகிறது. போதிய மரங்களுடன் பசுமை இல்லாததும் சாலைகள் மோசமாக உள்ளதும் கூட குஜராத் மாநிலத்தவர்கள் வெளிநாடுகளில் வாழ விரும்புவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

The post இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் மக்கள்.. டெல்லி முதலிடம், பஞ்சாப் 2ம் இடம், குஜராத் 3ம் இடம்!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Punjab 2nd ,Gujarat ,Ahmedabad ,Punjab ,
× RELATED பாராக மாறும் திருப்பூர் ரயில் நிலையம்...