×
Saravana Stores

கந்து வட்டி: பாஜக நிர்வாகி மகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் திருநங்கைகளிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய பாஜக மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை பாஜக மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளரும், ரவுடியுமான புளியந்தோப்பு அஞ்சலை மகள் தமிழரசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பு அஞ்சலை மகள் தமிழரசி, அவரது கணவர் டாட்டு மணி மீது கந்துவட்டி தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புளியந்தோப்பு அஞ்சலை ஏற்கனவே கந்துவட்டி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிலையில் அவரது மகள், மருமகன் கைது செய்யப்பட்டனர். கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக திருநங்கைகள் கொடுத்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

The post கந்து வட்டி: பாஜக நிர்வாகி மகள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,BJP district ,Pulianthopu Post ,Tamilharasi ,Ruvudi ,Bhajaka West District ,Vadachennai ,Pulianthopu ,Kandu ,
× RELATED தரமான துவரம் பருப்பு, பாமாயில்...