×
Saravana Stores

ஆர்டிஓவை கொல்ல முயற்சி அதிமுக நிர்வாகி மீது குண்டாஸ்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த கிளிக்குடி பகுதியில் இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி, அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் கிளிக்குடி ஊராட்சி பகுதியில் கடந்த மாதம் 13ம்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது ஆற்று மணல் ஏற்றி வந்த ஒரு டாடா 407 லாரியை ஆர்டிஓ நிறுத்த முயன்றார்.

ஆனால், டிரைவர் சங்கர் ஆர்டிஓ கார் மீது லாரியை மோதி அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்த வழக்கில் லாரி டிரைவர் சங்கர் மற்றும் லாரி உரிமையாளரான அதிமுக நிர்வாகி சுந்தரம் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், திருச்சி சிறையில் இருக்கும் சுந்தரம், டிரைவர் சங்கர் ஆகிய இருவரும் புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

The post ஆர்டிஓவை கொல்ல முயற்சி அதிமுக நிர்வாகி மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Guntas ,AIADMK ,Pudukottai ,Ilupur RTO ,Deivanayake ,Rajendran ,Klikkudi panchayat ,Klikkudi ,Annavasal ,Pudukkottai district ,Tata ,RTO ,Dinakaran ,
× RELATED சி.விஜயபாஸ்கர் சொத்து வழக்கு வேறு கோர்ட்டுக்கு திடீர் மாற்றம்